Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 10:88 — ஜோனா

மோஸஸ், “எங்கள் இரட்சகரே, ஃபேரோவிற்கும் அவனுடைய பிரதானிகளுக்கும் இவ்வுலகில் ஆடம்பரங்களையும், மேலும் செல்வத்தையும் நீர் வழங்கியிருக்கின்றீர். எங்கள் இரட்சகரே, அவர்கள் உமது பாதையிலிருந்து மற்றவர்களைத் துரத்துவதற்கு மட்டுமே அவற்றைப் பயன் படுத்துகின்றனர். எங்கள் இரட்சகரே, அவர் களுடைய செல்வத்தைத் துடைத்தெடுத்து விடுவீராக, மேலும் வலிமிகுந்த அந்தத் தண்டனையை அவர்கள் காணும் வரை, நம்பிக்கை கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கும் வண்ணம் அவர்களுடைய இதயங்களைக் கடினமாக்கி விடுவீராக” என்று கூறினார்.

[10:87] நாம் மோஸஸிற்கும் அவருடைய சகோதரருக்கும், “தற்போதைக்கு எகிப்தில் உள்ள உங்களது வீடுகளைப்பராமரித்துக் கொண்டு உங்கள் வீடுகளையே ஆலயங்களாக ஆக்கிக் கொள்ளுங் கள், மேலும் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) பேணிவாருங்கள். நம்பிக்கை கொண்டவர் களுக்கு நற்செய்தி வழங்குங்கள்” என்று உள்ளுணர்வு அளித்தோம்.

[10:89] அவர், “(மோஸஸ் மற்றும் ஆரோனே), உங்களுடைய பிரார்த்தனைக்கு பதிலளிக்கப் பட்டு விட்டது, எனவே உறுதியோடிருப்பீர்களாக, மேலும் அறியாதவர்களின் வழியைப் பின்பற்றாதீர்கள்” என்று கூறினார்.