குர்ஆன் 10:89 — ஜோனா
அவர், “(மோஸஸ் மற்றும் ஆரோனே), உங்களுடைய பிரார்த்தனைக்கு பதிலளிக்கப் பட்டு விட்டது, எனவே உறுதியோடிருப்பீர்களாக, மேலும் அறியாதவர்களின் வழியைப் பின்பற்றாதீர்கள்” என்று கூறினார்.
[10:88] மோஸஸ், “எங்கள் இரட்சகரே, ஃபேரோவிற்கும் அவனுடைய பிரதானிகளுக்கும் இவ்வுலகில் ஆடம்பரங்களையும், மேலும் செல்வத்தையும் நீர் வழங்கியிருக்கின்றீர். எங்கள் இரட்சகரே, அவர்கள் உமது பாதையிலிருந்து மற்றவர்களைத் துரத்துவதற்கு மட்டுமே அவற்றைப் பயன் படுத்துகின்றனர். எங்கள் இரட்சகரே, அவர் களுடைய செல்வத்தைத் துடைத்தெடுத்து விடுவீராக, மேலும் வலிமிகுந்த அந்தத் தண்டனையை அவர்கள் காணும் வரை, நம்பிக்கை கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கும் வண்ணம் அவர்களுடைய இதயங்களைக் கடினமாக்கி விடுவீராக” என்று கூறினார்.
[10:90] நாம் இஸ்ரவேலின் சந்ததியினரை கடலைக் கடக்கச் செய்து காப்பாற்றினோம். வலுச்சண்டை செய்பவர்களாகவும், மேலும் பாவகரமாகவும், ஃபேரோவும் அவனுடைய படையினரும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். மூழ்கிவிடுதல் அவனுக்கு ஒரு நிச்சயமானதாக ஆனபோது, அவன், “இஸ்ரவேலின் சந்ததியினர் நம்பிக்கை கொண்டிருக்கும் அந்த ஒருவரைத் தவிர, வேறு தெய்வம் இல்லை என நான் நம்பிக்கை கொள்கின்றேன்; நான் அடிபணிந்த ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறினான்.