குர்ஆன் 11:11 — ஹூ
உறுதியாய் விடாமுயற்சியுடன், மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோரைப் பொறுத்தவரை, அவர்கள் மன்னிப்பிற்கும் ஒரு தாராளமான பிரதிபலனுக்கும் தகுதியா கின்றனர்.
[11:10] துன்பம் அவனைத் துன்புறுத்திய பின்னர், அவனுக்கு நாம் அருள்பாலிக்கும் போதெல்லாம், “எல்லாத் துன்பங்களும் என்னை விட்டு அகன்று விட்டன” என்று அவன் கூறுகின்றான்;” அவன் உணர்ச்சி வசப்பட்டவனாகவும், கர்வம் கொண்ட வனாகவும் ஆகிவிடுகின்றான்.
[11:12] உமக்கு வெளிப்படுத்தப்பட்டவற்றில் சில வற்றை புறக்கணிக்க நீர் விரும்பக் கூடும், மேலும் அதனால் தொல்லையடையவும் கூடும். இன்னும், “இவரிடம் எந்தப் பொக்கிஷமோ, அல்லது ஒரு வானவரோ இறங்கி வராம லிருப்பது எப்படி?” என்றும் அவர்கள் கூறக் கூடும். நீர் ஓர் எச்சரிப்பவர் மட்டுமே; கடவுள் அனைத்தையும் கட்டுப்படுத்துகின்றார்.