Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 11:110 — ஹூ

நாம் மோஸஸிற்கு வேதத்தைக் கொடுத்தோம், ஆனால் அது தர்க்கிக்கப்பட்டது, மேலும் உமது இரட்சகரால் விதிக்கப்பட்ட முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு வார்த்தை இல்லாது இருந்திருந்தால், அவர்கள் உடனடியாகத் தீர்ப் பளிக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் இது குறித்து முற்றிலும் ஐயத்துடனும், சந்தேகத்துடனும் இருக்கின்றார்கள்.

[11:109] இந்த மக்கள் வழிபடுபவற்றைக் குறித்து எந்த சந்தேகமும் கொள்ளாதீர்; அவர்களுடைய பெற்றோர்கள் வழிபடுவதை அவர்கள் கண்ட அதே விதமாகவே அவர்கள் வழிபடுகின்றனர். அவர்களுக்குரிய பங்கை முழுமையாக, குறைவின்றி அவர்களுக்கு நாம் திருப்பித் தருவோம்.

[11:111] உமது இரட்சகர் நிச்சயமாக ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய செயல்களுக்குரிய பிரதிபலனை அளிப்பார். அவர்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் அவர் முற்றிலும் நன்கறிந்தவராக இருக் கின்றார்.