குர்ஆன் 11:109 — ஹூ
இந்த மக்கள் வழிபடுபவற்றைக் குறித்து எந்த சந்தேகமும் கொள்ளாதீர்; அவர்களுடைய பெற்றோர்கள் வழிபடுவதை அவர்கள் கண்ட அதே விதமாகவே அவர்கள் வழிபடுகின்றனர். அவர்களுக்குரிய பங்கை முழுமையாக, குறைவின்றி அவர்களுக்கு நாம் திருப்பித் தருவோம்.
[11:108] பாக்கியசாலிகளைப் பொறுத்தவரை, அவர்கள் சுவனத்தில் இருப்பார்கள். உமது இரட்சகரின் நாட்டத்திற்கிணங்க, வானங்கள் மற்றும் பூமி நிலைத்திருக்கும் வரை, என்றென்றும் அவர்கள் அங்கே தங்கி இருப்பார்கள் - நிலைத்திருக்கும் ஒரு வெகுமதி.
[11:110] நாம் மோஸஸிற்கு வேதத்தைக் கொடுத்தோம், ஆனால் அது தர்க்கிக்கப்பட்டது, மேலும் உமது இரட்சகரால் விதிக்கப்பட்ட முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு வார்த்தை இல்லாது இருந்திருந்தால், அவர்கள் உடனடியாகத் தீர்ப் பளிக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் இது குறித்து முற்றிலும் ஐயத்துடனும், சந்தேகத்துடனும் இருக்கின்றார்கள்.