குர்ஆன் 11:108 — ஹூ
பாக்கியசாலிகளைப் பொறுத்தவரை, அவர்கள் சுவனத்தில் இருப்பார்கள். உமது இரட்சகரின் நாட்டத்திற்கிணங்க, வானங்கள் மற்றும் பூமி நிலைத்திருக்கும் வரை, என்றென்றும் அவர்கள் அங்கே தங்கி இருப்பார்கள் - நிலைத்திருக்கும் ஒரு வெகுமதி.
[11:107] உமது இரட்சகரின் நாட்டத்திற்கிணங்க, வானங்கள் மற்றும் பூமி நிலைத்திருக்கும் வரை, என்றென்றும் அவர்கள் அங்கே தங்கியிருப் பார்கள். உமது இரட்சகர் நினைத்ததை முடிப்பவர்.
[11:109] இந்த மக்கள் வழிபடுபவற்றைக் குறித்து எந்த சந்தேகமும் கொள்ளாதீர்; அவர்களுடைய பெற்றோர்கள் வழிபடுவதை அவர்கள் கண்ட அதே விதமாகவே அவர்கள் வழிபடுகின்றனர். அவர்களுக்குரிய பங்கை முழுமையாக, குறைவின்றி அவர்களுக்கு நாம் திருப்பித் தருவோம்.