குர்ஆன் 11:13 — ஹூ
“இவர் (குர்ஆனை) இட்டுக்கட்டினார்” என்று அவர்கள் கூறினால், அவர்களிடம், “அப்படி யென்றால், இவற்றைப் போன்ற, பத்து சூராக்களை இட்டுக்கட்டிக் கொண்டு வாருங்கள்*, நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், கடவுள்-ஐ அன்றி, உங்களால் முடிந்தவர்களை அழைத்துக் கொள்ளுங்கள்”* என்று கூறுவீராக.
[11:12] உமக்கு வெளிப்படுத்தப்பட்டவற்றில் சில வற்றை புறக்கணிக்க நீர் விரும்பக் கூடும், மேலும் அதனால் தொல்லையடையவும் கூடும். இன்னும், “இவரிடம் எந்தப் பொக்கிஷமோ, அல்லது ஒரு வானவரோ இறங்கி வராம லிருப்பது எப்படி?” என்றும் அவர்கள் கூறக் கூடும். நீர் ஓர் எச்சரிப்பவர் மட்டுமே; கடவுள் அனைத்தையும் கட்டுப்படுத்துகின்றார்.
[11:14] அவர்கள் உமது சவாலைச் சந்திக்கத் தவறி னால், பின்னர் இது கடவுள்-ன் அறிவைக் கொண்டு வெளிப்படுத்தப்பட்டதென்றும், மேலும் அவரைத் தவிர தெய்வம் இல்லை யென்றும் அறிந்து கொள்ளுங்கள். இப்போது நீங்கள் அடிபணிவீர்களா?