Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 11:84 — ஹூ

மித்யனுக்கு அவர்களுடைய சகோதரர் ஷுஐபை நாம் அனுப்பினோம். அவர் கூறினார், “என்னுடைய சமூகத்தாரே, கடவுள்-ஐ வழிபடுங்கள்; அவரைத்தவிர வேறு தெய்வம் உங்களுக்கு இல்லை. நீங்கள் அளந்திடும் போதும், அல்லது எடை போடும் போதும் மோசடி செய்யாதீர்கள். நீங்கள் வளம் பெற்றவர்களாக இருப்பதை நான் காண்கின்றேன், மேலும் சூழ்ந்து கொள்ளும் ஒரு நாளின் தண்டனையை குறித்து உங்களுக்காக நான் அஞ்சுகின்றேன்.

[11:83] இத்தகைய பாறைகள் வரம்பு மீறியவர்களைத் தாக்குவதற்கென்றே உமது இரட்சகரால் நியமிக்கப்பட்டிருந்தன.

[11:85] “என்னுடைய சமூகத்தாரே, அளவையும், மற்றும் எடையையும் நீங்கள் நீதத்துடன், நிறைவாகக் கொடுக்க வேண்டும். மக்களை, அவர்களுடைய உரிமைகளில் மோசடி செய்யாதீர்கள், மேலும் நேர்மையற்றவர்களாக பூமியில் சுற்றித் திரியா தீர்கள்.