குர்ஆன் 12:11 — ஜோஸஃப்
அவர்கள் கூறினர், “எங்கள் தந்தையே, ஜோஸஃப் விஷயத்தில் எங்களை ஏன் நீங்கள் நம்புவதில்லை? நாங்கள் அவரை நன்கு கவனித்துக் கொள்வோம்.
[12:10] அவர்களில் ஒருவர், “ஜோஸஃபைக் கொன்று விடாதீர்கள்; நாம் அவரை ஒரு கிணற்றின் ஆழத்தில் எறிந்து விடுவோம். இவ்வாறு செய்ய நீங்கள் முடிவெடுத்தால், ஒருவேளை ஏதேனும் பிரயாணிகளின் கூட்டம் அவரை எடுத்துக் கொண்டு போய்விடக்கூடும்” என்று கூறினார்.
[12:12] “நாளை அவரை எங்களுடன் ஓடி விளையாட அனுப்பி வையுங்கள். நாங்கள் அவரைப் பாதுகாத்துக் கொள்வோம்.”