குர்ஆன் 12:39 — ஜோஸஃப்
“என் சிறைத் தோழர்களே, மேலானது பல தெய்வங்களா, அல்லது ஒருவரும், மேலான அதிகாரம் கொண்டவருமான கடவுள் மட்டுமா?
[12:38] “மேலும் நான் அதற்கு மாறாக, எனது முன்னோர்களான ஆப்ரஹாம், ஐசக் மற்றும் ஜேக்கப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்று கின்றேன். கடவுள்-உடன் எந்த இணைத் தெய்வங்களையும் நாங்கள் ஒருபோதும் அமைத்துக் கொள்வதில்லை. எங்கள் மீதும், மேலும் மனிதர்கள் மீதும் கடவுள் இடமிருந்துள்ள அருட்கொடை இத்தகைய தேயாகும், ஆனால் மனிதர்களில் பெரும் பாலோர் நன்றியற்றவர்களாக இருக்கின்றனர்.
[12:40] “அவருடன் நீங்கள் வழிபடுபவை, நீங்களும் உங்கள் பெற்றோர்களும் உருவாக்கிக் கொண்ட புதுமைகளேயன்றி வேறில்லை. இத் தகைய இணைத் தெய்வங்களுக்கு கடவுள் ஒரு போதும் அதிகாரம் அளித்திடவில்லை. கட்டளைகள் அனைத்தும் கடவுள்-க்கு உரிய வை, மேலும் அவரை அன்றி நீங்கள் வழிபடக் கூடாதென அவர் கட்டளையிடுகின்றார். இதுவே பூரணமான மார்க்கம், ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.