குர்ஆன் 12:87 — ஜோஸஃப்
“என் மகன்களே, சென்று ஜோஸஃபையும், அவருடைய சகோதரரையும் கூட்டிக்கொண்டு வாருங்கள், மேலும் கடவுள்-ன் அருளில் ஒரு போதும் நம்பிக்கையிழந்து விடாதீர்கள். நம்ப மறுக்கும் மக்களைத் தவிர எவரும் கடவுள்-ன் அருளில் நம்பிக்கையிழக்க மாட்டார்கள்.”
[12:86] அவர்கூறினார், “எனது தடுமாற்றத்தையும் மேலும் கவலையையும் நான் கடவுள்-இடம் முறையிடுகின்றேன், அவ்வளவுதான், ஏனெனில் நீங்கள் அறியாதவற்றைக் கடவுள்-இடமிருந்து நான் அறிவேன்.
[12:88] (ஜோஸஃபின்) இல்லத்திற்குள் அவர்கள் நுழைந்த போது, அவர்கள், “பெருந்தகையே, நாங்களும் எங்கள் குடும்பத்தாரும், ஏராளமான கஷ்டங்களை அனுபவித்து விட்டோம், மேலும் தரம் குறைந்த பொருட்களையே நாங்கள் கொண்டு வந்துள்ளோம். ஆயினும் நீர் எங்களுக்கு அளவை முழுமையாக தருவீரென்றும் எங்களிடம் பெருந்தன்மையுடன் இருப்பீரென்றும் நாங்கள் நம்புகின்றோம். பெருந்தன்மையுடையோருக்குக் கடவுள் வெகுமதியளிக்கின்றார்” என்று கூறினார்கள்.