Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:114 — தேனீ

ஆகையால், நீங்கள் கடவுள்-ஐ மட்டும் வழிபடுபவர்களாக இருந்தால், அனுமதிக்கப் பட்டதும் நல்லதுமான அவருடைய வாழ்வா தாரங்கள் ஒவ்வொன்றில் இருந்தும் நீங்கள் உண்ணவும், கடவுள்-ன்அருட்கொடை களுக்கு நன்றியோடிருக்கவும் வேண்டும்.

[16:113] அவர்களில் இருந்தே ஒரு தூதர் அவர்களிடம் சென்றார், ஆனால் அவர்கள் அவரை ஏற்க மறுத்தனர். அதன் விளைவாக, அவர் களுடைய வரம்புமீறலுக்காக தண்டனை அவர்களைத் தாக்கியது.

[16:115] செத்த பிராணிகள், இரத்தம், பன்றியின் இறைச்சி* மற்றும் கடவுள்-ஐ விடுத்து மற்றவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட உணவு ஆகியவற்றை மட்டுமே அவர் உங்களுக்குத் தடை செய்கின்றார். வேண்டுமென்றோ அல்லது தீய எண்ணமோ இல்லாதிருந்து (இவற்றை உண்ணும்படி) ஒருவர் நிர்ப் பந்திக்கப்பட்டால், அப்போது கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.