குர்ஆன் 16:113 — தேனீ
அவர்களில் இருந்தே ஒரு தூதர் அவர்களிடம் சென்றார், ஆனால் அவர்கள் அவரை ஏற்க மறுத்தனர். அதன் விளைவாக, அவர் களுடைய வரம்புமீறலுக்காக தண்டனை அவர்களைத் தாக்கியது.
[16:112] ஒவ்வொரு புறத்திலிருந்தும் அதற்கு வாழ்வாதாரங்கள் வந்த வண்ணம், பாதுகாப் புடனும், வளத்துடனும் இருந்து வந்த ஒரு சமூகத்தின் உதாரணத்தைக் கடவுள் எடுத்துரைக்கின்றார். ஆனால் பின்னர், கடவுள்-ன் அருட்கொடைகளுக்கு நன்றி கெட்டதாக அது மாறியது. அதன் விளைவாக, பட்டினி மற்றும் பாதுகாப்பின்மையின் கஷ்டங் களை அவர்கள் சுவைக்கும்படிக் கடவுள் செய்தார். அவர்கள் செய்ததற்கான பிரதிபலன் இத்தகையதேயாகும்.
[16:114] ஆகையால், நீங்கள் கடவுள்-ஐ மட்டும் வழிபடுபவர்களாக இருந்தால், அனுமதிக்கப் பட்டதும் நல்லதுமான அவருடைய வாழ்வா தாரங்கள் ஒவ்வொன்றில் இருந்தும் நீங்கள் உண்ணவும், கடவுள்-ன்அருட்கொடை களுக்கு நன்றியோடிருக்கவும் வேண்டும்.