குர்ஆன் 16:112 — தேனீ
ஒவ்வொரு புறத்திலிருந்தும் அதற்கு வாழ்வாதாரங்கள் வந்த வண்ணம், பாதுகாப் புடனும், வளத்துடனும் இருந்து வந்த ஒரு சமூகத்தின் உதாரணத்தைக் கடவுள் எடுத்துரைக்கின்றார். ஆனால் பின்னர், கடவுள்-ன் அருட்கொடைகளுக்கு நன்றி கெட்டதாக அது மாறியது. அதன் விளைவாக, பட்டினி மற்றும் பாதுகாப்பின்மையின் கஷ்டங் களை அவர்கள் சுவைக்கும்படிக் கடவுள் செய்தார். அவர்கள் செய்ததற்கான பிரதிபலன் இத்தகையதேயாகும்.
[16:111] ஒவ்வொரு ஆன்மாவும் தனக்கே வாதாடு பவராகப் பணிபுரியும் அந்நாள் வரும், மேலும் ஒவ்வொரு ஆன்மாவிற்கும் அது செய்த வற்றிற்கெல்லாம் சிறிதளவும் அநீதமின்றி, முழுமையாகக் கொடுக்கப்படும்.
[16:113] அவர்களில் இருந்தே ஒரு தூதர் அவர்களிடம் சென்றார், ஆனால் அவர்கள் அவரை ஏற்க மறுத்தனர். அதன் விளைவாக, அவர் களுடைய வரம்புமீறலுக்காக தண்டனை அவர்களைத் தாக்கியது.