குர்ஆன் 16:111 — தேனீ
ஒவ்வொரு ஆன்மாவும் தனக்கே வாதாடு பவராகப் பணிபுரியும் அந்நாள் வரும், மேலும் ஒவ்வொரு ஆன்மாவிற்கும் அது செய்த வற்றிற்கெல்லாம் சிறிதளவும் அநீதமின்றி, முழுமையாகக் கொடுக்கப்படும்.
[16:110] அடக்குமுறை செய்யப்பட்ட காரணத்தால் ஊரைத்துறந்து வெளியேறி, பின்னர் தொடர்ந்து பாடுபட்டு, மேலும் உறுதியாய் விடாமுயற்சியோடிருப்பவர்களைப் பொறுத்தவரை, உமது இரட்சகர், இவை அனைத்தின் காரணமாக மன்னிப்பவராகவும், மிக்க கருணையாளராகவும் இருக்கின்றார்.
[16:112] ஒவ்வொரு புறத்திலிருந்தும் அதற்கு வாழ்வாதாரங்கள் வந்த வண்ணம், பாதுகாப் புடனும், வளத்துடனும் இருந்து வந்த ஒரு சமூகத்தின் உதாரணத்தைக் கடவுள் எடுத்துரைக்கின்றார். ஆனால் பின்னர், கடவுள்-ன் அருட்கொடைகளுக்கு நன்றி கெட்டதாக அது மாறியது. அதன் விளைவாக, பட்டினி மற்றும் பாதுகாப்பின்மையின் கஷ்டங் களை அவர்கள் சுவைக்கும்படிக் கடவுள் செய்தார். அவர்கள் செய்ததற்கான பிரதிபலன் இத்தகையதேயாகும்.