Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:79 — தேனீ

வானத்தின் காற்றுவெளியில் பறக்கும்படிச் செய்யப்பட்ட பறவைகளை அவர்கள் பார்க்கவில்லையா? மேலே காற்றில் அவற்றைப் பிடித்துக் கொண்டிருப்பவர் கடவுள்-ஐ அன்றி எவருமில்லை. நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இது (போதிய) சான்றாக இருக்கவேண்டும்.

[16:78] எதையும் அறியாதவர்களாக உங்களை உங்கள் தாயார்களின் வயிறுகளில் இருந்து கடவுள் வெளியில் கொண்டு வந்தார், மேலும் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைப் புலனையும், மற்றும் மூளைகளையும், நீங்கள் நன்றியுடையோராக இருக்கக் கூடும் என்பதற்காக அவர் வழங்கினார்.

[16:80] மேலும் நீங்கள் வசிக்கக் கூடிய அசையா வீடுகளை உங்களுக்காகக் கடவுள் வழங்கினார். மேலும் பயணத்தின்போதும், இருப்பிடத்தில் தங்கியிருக்கும் போதும் அவற்றை நீங்கள் பயன்படுத்தும் வண்ணம் கால் நடைகளின் தோல்களினால் செய்யப்பட்ட எளிதில் தூக்கிச் செல்லத்தக்க வீடுகளை உங்களுக்கு அவர் வழங்கினார். மேலும் அவற்றின் கம்பளிகள், மிருதுவான உரோமங்கள், மற்றும் முடியிலிருந்து, நீங்கள் சிறிது காலத்திற்காக தட்டு முட்டுச் சாமான்களையும் மேலும் சொகுசுச் சாதனங்களையும் செய்து கொள்கின்றீர்கள்.