Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 17:101 — இஸ்ரவேலின் சந்ததியினர்

ஒன்பது ஆழ்ந்த அற்புதங்கள் கொண்டு மோஸஸிற்கு நாம் ஆதரவளித்தோம் - இஸ்ரவேலின் சந்ததியினரைக் கேட்டுக் கொள் ளுங்கள். அவர்களிடம் அவர் சென்ற போது, ஃபேரோ அவரிடம், “ மோஸஸே, நீர் சூனியம் செய்யப்பட்டுவிட்டீர் என்று நான் நினைக் கின்றேன்“ என்று கூறினான்.

[17:100] “என்னுடைய இரட்சகரின் கருணைப் பொக்கிஷங்களையே நீங்கள் சொந்தமாகக் கொண்டிருந்தாலும், அவற்றை நீங்கள் செல வழித்து விடக்கூடும் என்று அஞ்சி, நீங்கள் அவற்றை நிறுத்திக் கொண்டிருப்பீர்கள். மனிதப் படைப்பு கஞ்சத்தனம் கொண்டதாக இருக்கின்றது” என்று பிரகடனம் செய்வீராக.

[17:102] அவர், “கண்கூடாக, வானங்கள் மற்றும் பூமியின் இரட்சகரைத் தவிர, எவராலும் இவற்றை இவ்வளவு தெளிவாகக்காட்ட இயலாது என்பதை நீ நன்கறிவாய். ஃபேரோவே, நீ அழிந்தாய் என்று நான் நினைக்கின்றேன்” என்று கூறினார்.