குர்ஆன் 17:102 — இஸ்ரவேலின் சந்ததியினர்
அவர், “கண்கூடாக, வானங்கள் மற்றும் பூமியின் இரட்சகரைத் தவிர, எவராலும் இவற்றை இவ்வளவு தெளிவாகக்காட்ட இயலாது என்பதை நீ நன்கறிவாய். ஃபேரோவே, நீ அழிந்தாய் என்று நான் நினைக்கின்றேன்” என்று கூறினார்.
[17:101] ஒன்பது ஆழ்ந்த அற்புதங்கள் கொண்டு மோஸஸிற்கு நாம் ஆதரவளித்தோம் - இஸ்ரவேலின் சந்ததியினரைக் கேட்டுக் கொள் ளுங்கள். அவர்களிடம் அவர் சென்ற போது, ஃபேரோ அவரிடம், “ மோஸஸே, நீர் சூனியம் செய்யப்பட்டுவிட்டீர் என்று நான் நினைக் கின்றேன்“ என்று கூறினான்.
[17:103] அவன் அவர்களை நாட்டை விட்டு வெளியே துரத்தியவாறு, அவன் அவர்களை பின்தொடர்ந்த போது, அவன் பக்கம் இருந்தவர்களுடன் சேர்த்து அவனையும், அவர்கள் அனைவரையும் நாம் மூழ்கடித்தோம்.