குர்ஆன் 17:19 — இஸ்ரவேலின் சந்ததியினர்
மறுவுலகைத் தனது முன்னுரிமையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, மேலும் நம்பிக்கை கொண்ட நிலையில், நன்னெறிகள் புரிவோரைப் பொறுத்தவரை, அவர்களுடைய முயற்சிகள் பாராட்டப்படும்.
[17:18] எவர் ஒருவர் இந்த விரைந்தோடும் வாழ்வைத் தனது முன்னுரிமையாகத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றாரோ, அவருக்கு நாம் கொடுக்கத் தீர்மானித்தவற்றை அவரிடம் விரையச் செய்வோம், பின்னர் அவரை ஜஹன்னாவிடம் ஒப்படைத்து விடுவோம், அங்கே அவர் இழிவடைந்தவராகவும், மேலும் தோற்கடிக்கப் பட்டவராகவும் நிரந்தரமாகத் துன்பப்படுவார்.
[17:20] அவர்கள் ஒவ்வொருவருக்கும் நாம் வழங்குகின்றோம்; அவர்களுக்கும் மற்றும் இவர்களுக்கும் உமது இரட்சகரின் தயாளத்தில் இருந்து நாம் வழங்குகின்றோம். உமது இரட்சகரின் தயாளம் தீர்ந்து போகாதது.