குர்ஆன் 17:41 — இஸ்ரவேலின் சந்ததியினர்
அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் பொருட்டு, இந்த குர்ஆனில் (எல்லாவிதமான உதாரணங்களையும்) நாம் எடுத்துரைத் திருக்கின்றோம். ஆனால் அது அவர்களுடைய வெறுப்பைத்தான் அதிகரிக்கின்றது.
[17:40] உங்கள் இரட்சகர் வானவர்களைத் தனக்கு மகள்களாகத் தந்து கொண்டு, அதே சமயம் உங்களுக்கு மகன்களைத் தந்து விட்டாரா?! இத்தகையதொரு இறைநிந்தனையை எப்படி நீங்கள் கூறலாம்?
[17:42] “அவர்கள் கூறுவதைப்போல், மற்றெந்தத் தெய்வங்களேனும் அவருடன் இருந்திருந்தால், அவர்கள் அரியாசனத்தின் உடைமையாளரை வெற்றி கொள்ள முயன்றிருப்பார்கள்” என்று கூறுவீராக.