குர்ஆன் 17:42 — இஸ்ரவேலின் சந்ததியினர்
“அவர்கள் கூறுவதைப்போல், மற்றெந்தத் தெய்வங்களேனும் அவருடன் இருந்திருந்தால், அவர்கள் அரியாசனத்தின் உடைமையாளரை வெற்றி கொள்ள முயன்றிருப்பார்கள்” என்று கூறுவீராக.
[17:41] அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் பொருட்டு, இந்த குர்ஆனில் (எல்லாவிதமான உதாரணங்களையும்) நாம் எடுத்துரைத் திருக்கின்றோம். ஆனால் அது அவர்களுடைய வெறுப்பைத்தான் அதிகரிக்கின்றது.
[17:43] அவர் துதிப்பிற்குரியவர், அவர்களுடைய கூற்றுக்களுக்கு அப்பாற்பட்டு, அவர் மிக மிக உயர்வானவர்.