குர்ஆன் 17:43 — இஸ்ரவேலின் சந்ததியினர்
அவர் துதிப்பிற்குரியவர், அவர்களுடைய கூற்றுக்களுக்கு அப்பாற்பட்டு, அவர் மிக மிக உயர்வானவர்.
[17:42] “அவர்கள் கூறுவதைப்போல், மற்றெந்தத் தெய்வங்களேனும் அவருடன் இருந்திருந்தால், அவர்கள் அரியாசனத்தின் உடைமையாளரை வெற்றி கொள்ள முயன்றிருப்பார்கள்” என்று கூறுவீராக.
[17:44] ஏழு பிரபஞ்சங்களும், பூமியும், இன்னும் அவற்றிலுள்ள ஒவ்வொன்றும் அவரைத் துதிக்கின்றன. அவரைத் துதிக்காத எதுவும் அங்கில்லை, ஆனால் அவைகளின் துதிப்பை நீங்கள் புரிந்து கொள்வதில்லை. அவர் கனிவானவர், மன்னிப்பவர்.