குர்ஆன் 17:44 — இஸ்ரவேலின் சந்ததியினர்
ஏழு பிரபஞ்சங்களும், பூமியும், இன்னும் அவற்றிலுள்ள ஒவ்வொன்றும் அவரைத் துதிக்கின்றன. அவரைத் துதிக்காத எதுவும் அங்கில்லை, ஆனால் அவைகளின் துதிப்பை நீங்கள் புரிந்து கொள்வதில்லை. அவர் கனிவானவர், மன்னிப்பவர்.
[17:43] அவர் துதிப்பிற்குரியவர், அவர்களுடைய கூற்றுக்களுக்கு அப்பாற்பட்டு, அவர் மிக மிக உயர்வானவர்.
[17:45] நீர் குர்ஆனை படிக்கும் போது, உமக்கும் மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ளா தோருக்கும் இடையில் காணமுடியாததொரு தடையை நாம் அமைத்து விடுகின்றோம்.