குர்ஆன் 17:45 — இஸ்ரவேலின் சந்ததியினர்
நீர் குர்ஆனை படிக்கும் போது, உமக்கும் மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ளா தோருக்கும் இடையில் காணமுடியாததொரு தடையை நாம் அமைத்து விடுகின்றோம்.
[17:44] ஏழு பிரபஞ்சங்களும், பூமியும், இன்னும் அவற்றிலுள்ள ஒவ்வொன்றும் அவரைத் துதிக்கின்றன. அவரைத் துதிக்காத எதுவும் அங்கில்லை, ஆனால் அவைகளின் துதிப்பை நீங்கள் புரிந்து கொள்வதில்லை. அவர் கனிவானவர், மன்னிப்பவர்.
[17:46] அவர்கள் அதனைப் புரிந்து கொள்வதை விட்டுத் தடுப்பதற்காக, அவர்களுடைய மனங்களைச் சுற்றிக் கவசங்களையும், அவர்களுடைய காதுகளில் செவிட்டுத்தனத்தையும் நாம் அமைத்து விடுகின்றோம். மேலும் குர்ஆனை மட்டும்* பயன்படுத்தி, உமது இரட்சகரைப்பற்றி நீர் உபதேசித்தால், அவர்கள் வெறுப்பினால் வெருண்டோடி விடுகின்றனர்.