குர்ஆன் 17:54 — இஸ்ரவேலின் சந்ததியினர்
உங்கள் இரட்சகர் உங்களை நன்கறிவார். அவருடைய அறிவிற்கேற்ப, உங்கள் மீது கருணையை அவர் பொழியலாம், அல்லது அவர் உங்களைப் பழி தீர்க்கவும் செய்யலாம். அவர் களுடைய வழக்கறிஞராக இருப்பதற்காக உம்மை நாம் அனுப்பவில்லை.
[17:53] ஒருவரை ஒருவர் இயன்றவரை மிகச்சிறப்பாக நடத்திக்கொள்ளும்படி என் அடியார்களிடம் கூறுவீராக, ஏனெனில் சாத்தான் எப்போதும் அவர்களுக்கிடையில் ஒரு பிளவை உண்டாக்க முயற்சிப்பான். நிச்சயமாக, சாத்தான் மனி தனுடைய மிகத் தீவிரமான விரோதியாவான்.
[17:55] உமது இரட்சகர் வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொருவரையும் நன்கறிந்தவராக இருக்கின்றார். இந்த அறிவிற்கேற்ப, சில வேதம் வழங்கப்பட்டவர்களை மற்றவர்களை விட மேலாக நாம் தேர்ந்தெடுத்தோம். உதாரணத்திற்கு, டேவிட்டிற்கு நாம் சங்கீதத்தைக் கொடுத்தோம்.