குர்ஆன் 17:53 — இஸ்ரவேலின் சந்ததியினர்
ஒருவரை ஒருவர் இயன்றவரை மிகச்சிறப்பாக நடத்திக்கொள்ளும்படி என் அடியார்களிடம் கூறுவீராக, ஏனெனில் சாத்தான் எப்போதும் அவர்களுக்கிடையில் ஒரு பிளவை உண்டாக்க முயற்சிப்பான். நிச்சயமாக, சாத்தான் மனி தனுடைய மிகத் தீவிரமான விரோதியாவான்.
[17:52] அவர் உங்களை வரவழைக்கும் அந்நாளில், அவரைப் புகழ்வதன் மூலம் நீங்கள் மறுமொழி யளிப்பீர்கள், மேலும் ஒரு குறுகிய காலம் தான் இந்த வாழ்வில் நீங்கள் நிலைத்திருந்தீர்கள் என்பதை அப்போது நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.
[17:54] உங்கள் இரட்சகர் உங்களை நன்கறிவார். அவருடைய அறிவிற்கேற்ப, உங்கள் மீது கருணையை அவர் பொழியலாம், அல்லது அவர் உங்களைப் பழி தீர்க்கவும் செய்யலாம். அவர் களுடைய வழக்கறிஞராக இருப்பதற்காக உம்மை நாம் அனுப்பவில்லை.