குர்ஆன் 17:59 — இஸ்ரவேலின் சந்ததியினர்
அற்புதங்களை அனுப்புவதிலிருந்து நம்மைத் தடுத்தது என்னவெனில், முந்திய தலை முறையினர் அவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர் என்பது தான். உதாரணமாக, தமூதிற்கு ஓர் ஒட்டகத்தை நாம் காட்டினோம், ஆழ்ந்த ஓர் (அற்புதம்), ஆனால் அவர்கள் அதற்கெதிராக வரம்பு மீறினர். பயபக்தியை ஊட்டுவதற்காக மட்டுமே நாம் அற்புதங்களை அனுப்பினோம்.
[17:58] மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளுக்கு முன்னர் நம்மால் அழிக்கப்படாத, அல்லது கடும் தண்டனைக்கு அவர்களை உட்படுத்தாத எந்த ஒரு சமூகமும் இல்லை. இது முன்னரே புத்த கத்தில் எழுதப்பட்டுள்ளது.
[17:60] உமது இரட்சகர் மனிதர்களை முற்றிலும் கட்டுப்படுத்துகின்றார் என்பதை உமக்கு நாம் தெரியப்படுத்தினோம், மேலும் நாம் உமக்குக் காட்டிய காட்சியையும்*, குர்ஆனில் சபிக்கப் பட்டுள்ள அந்த மரத்தையும் மனிதர்களுக்கு ஒரு சோதனையாக நாம் ஆக்கினோம். அவர்களுக்கு பயபக்தியை ஊட்டுவதற்காக உறுதியான சான்றுகளை அவர்களுக்கு நாம் காட்டினோம், ஆனால் இது அவர்களுடைய எதிர்ப்பைத்தான் அதிகரித்தது.