குர்ஆன் 17:58 — இஸ்ரவேலின் சந்ததியினர்
மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளுக்கு முன்னர் நம்மால் அழிக்கப்படாத, அல்லது கடும் தண்டனைக்கு அவர்களை உட்படுத்தாத எந்த ஒரு சமூகமும் இல்லை. இது முன்னரே புத்த கத்தில் எழுதப்பட்டுள்ளது.
[17:57] அவர்கள் இறைஞ்சிப் பிரார்த்திக்கின்ற இணைத் தெய்வங்கள் கூட தங்களுடைய இரட்சகரின் பால் வழிகளையும் உபாயங்களையும் தேடிக் கொண்டிருக்கின்றனர். அவருடைய கருணைக் காக அவர்கள் பிரார்த்திக்கின்றனர், மேலும் அவருடைய தண்டனையை அஞ்சுகின்றனர். நிச்சயமாக, உமது இரட்சகரின் தண்டனை அச்சமூட்டுவதாகவே உள்ளது.
[17:59] அற்புதங்களை அனுப்புவதிலிருந்து நம்மைத் தடுத்தது என்னவெனில், முந்திய தலை முறையினர் அவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர் என்பது தான். உதாரணமாக, தமூதிற்கு ஓர் ஒட்டகத்தை நாம் காட்டினோம், ஆழ்ந்த ஓர் (அற்புதம்), ஆனால் அவர்கள் அதற்கெதிராக வரம்பு மீறினர். பயபக்தியை ஊட்டுவதற்காக மட்டுமே நாம் அற்புதங்களை அனுப்பினோம்.