Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 17:57 — இஸ்ரவேலின் சந்ததியினர்

அவர்கள் இறைஞ்சிப் பிரார்த்திக்கின்ற இணைத் தெய்வங்கள் கூட தங்களுடைய இரட்சகரின் பால் வழிகளையும் உபாயங்களையும் தேடிக் கொண்டிருக்கின்றனர். அவருடைய கருணைக் காக அவர்கள் பிரார்த்திக்கின்றனர், மேலும் அவருடைய தண்டனையை அஞ்சுகின்றனர். நிச்சயமாக, உமது இரட்சகரின் தண்டனை அச்சமூட்டுவதாகவே உள்ளது.

[17:56] “அவருடன் நீங்கள் அமைத்துக் கொண்டிருக் கின்ற இணைத்தெய்வங்கள் எதனிடம் வேண்டு மானாலும் இறைஞ்சிப் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்” என்று கூறுவீராக. உங்கள் துன்பங்களை நிவர்த்திக்கும் சக்தி எதுவும் அவர்களுக்கு இல்லை, அன்றி அவைகளால் அவற்றைத் தடுத்து விடவும் முடியாது.

[17:58] மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளுக்கு முன்னர் நம்மால் அழிக்கப்படாத, அல்லது கடும் தண்டனைக்கு அவர்களை உட்படுத்தாத எந்த ஒரு சமூகமும் இல்லை. இது முன்னரே புத்த கத்தில் எழுதப்பட்டுள்ளது.