Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 17:56 — இஸ்ரவேலின் சந்ததியினர்

“அவருடன் நீங்கள் அமைத்துக் கொண்டிருக் கின்ற இணைத்தெய்வங்கள் எதனிடம் வேண்டு மானாலும் இறைஞ்சிப் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்” என்று கூறுவீராக. உங்கள் துன்பங்களை நிவர்த்திக்கும் சக்தி எதுவும் அவர்களுக்கு இல்லை, அன்றி அவைகளால் அவற்றைத் தடுத்து விடவும் முடியாது.

[17:55] உமது இரட்சகர் வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொருவரையும் நன்கறிந்தவராக இருக்கின்றார். இந்த அறிவிற்கேற்ப, சில வேதம் வழங்கப்பட்டவர்களை மற்றவர்களை விட மேலாக நாம் தேர்ந்தெடுத்தோம். உதாரணத்திற்கு, டேவிட்டிற்கு நாம் சங்கீதத்தைக் கொடுத்தோம்.

[17:57] அவர்கள் இறைஞ்சிப் பிரார்த்திக்கின்ற இணைத் தெய்வங்கள் கூட தங்களுடைய இரட்சகரின் பால் வழிகளையும் உபாயங்களையும் தேடிக் கொண்டிருக்கின்றனர். அவருடைய கருணைக் காக அவர்கள் பிரார்த்திக்கின்றனர், மேலும் அவருடைய தண்டனையை அஞ்சுகின்றனர். நிச்சயமாக, உமது இரட்சகரின் தண்டனை அச்சமூட்டுவதாகவே உள்ளது.