குர்ஆன் 17:6 — இஸ்ரவேலின் சந்ததியினர்
“அதன்பின்னர், நாம் அவர்கள் மீது உங்களுக்கொரு வாய்ப்புத் தருவோம், மேலும் எராளமாக செல்வங்களையும் மற்றும் பிள்ளை களையும் நாம் வழங்குவோம்; நாம் உங்களுக்கு மேன்மையைத் தருவோம்.
[17:5] “முதல் முறை நிகழும் பொழுது, மிகவும் பலம் வாய்ந்த நம்முடைய பணியாட்களை உங்களுக் கெதிராக நாம் அனுப்புவோம் , அவர்கள் உங்களுடைய வீடுகள் மீது படையெடுப்பார்கள். இது நிகழ்ந்தே தீர வேண்டிய ஒரு முன்னறி விப்பாகும்.
[17:7] “நீங்கள் நன்னெறிகளை செய்தால், உங்கள் சொந்த நலனுக்கே நீங்கள் நன்னெறிகளை செய்து கொள்கின்றீர்கள், ஆனால் நீங்கள் தீமைகள் செய்தால் உங்களுடைய சொந்த கேட்டிற்காகத் தான் அவ்வாறு நீங்கள் செய்கின்றீர்கள். இவ்விதமாக, இரண்டாவது முறை நிகழ்ந்தேறும் பொழுது, அவர்கள் உங்களைத் தோற்கடிப்பார்கள், மேலும் முதல் முறை அவர்கள் செய்ததைப் போலவே, மஸ்ஜிதில் நுழைவார்கள். நீங்கள் சேகரித்த இலாபங்கள் அனைத்தையும் அவர்கள் துடைத்தெடுத்து விடுவார்கள்.”