குர்ஆன் 17:72 — இஸ்ரவேலின் சந்ததியினர்
இந்த வாழ்வில் குருடர்களாக இருந்தவர்களைப் பொறுத்தவரை, மறுவுலகிலும் அவர்கள் குருடர்களாகவே இருப்பார்கள்; அதை விடவும் மிக மோசமாக.
[17:71] ஒவ்வொரு சமூகத்தினரையும், அவர்களுடைய பதிவேடுகளுடன் நாம் வரவழைக்கும் அந்நாள் வரும். நன்னெறியின் பதிவேடு கொடுக்கப் பட்டோரைப் பொறுத்தவரை, அவர்கள் தங்கள் பதிவேடுகளைப் படிப்பார்கள் மேலும் சிறிதளவு அநீதியையும் அனுபவிக்க மாட்டார்கள்.
[17:73] நாம் உமக்குக் கொடுத்த வெளிப்பாடுகளை விட்டு அவர்கள் உம்மைக் கிட்டத்தட்டத் திருப்பி விட்டனர். உம்மை ஒரு நண்பராகக் கருதிக் கொள்வதற்காக, வேறு எதையாவது நீர் இட்டுக் கட்டிக் கூற வேண்டுமென்று அவர்கள் விரும்பினர்.