குர்ஆன் 17:99 — இஸ்ரவேலின் சந்ததியினர்
வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த அந்தக் கடவுள் அதே போன்ற படைப்புகளைப் படைக்கும் திறனுடையவர் என்பதை அவர்களால் காண முடியவில்லையா? மாற்றமுடியாததொரு வாழ்க்கைத் தவணையை அவர்களுக்காக அவர் முன்னரே தீர்மானித்திருக்கின்றார்? இருப் பினும், நம்ப மறுப்பவர்கள் நம்ப மறுத்தலையே வலியுறுத்துகின்றனர்.
[17:98] நமது வெளிப்பாடுகளை அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்ததால், அவர்களுக்குரிய நியாயமான தண்டனை இத்தகையதேயாகும். அவர்கள், “ எலும்புகளாகவும், துகள்களாகவும் நாம் மாறிய பின்னர், புதியதொரு படைப்பாக நாம் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுவோமா?” என்று கூறினார்கள்.
[17:100] “என்னுடைய இரட்சகரின் கருணைப் பொக்கிஷங்களையே நீங்கள் சொந்தமாகக் கொண்டிருந்தாலும், அவற்றை நீங்கள் செல வழித்து விடக்கூடும் என்று அஞ்சி, நீங்கள் அவற்றை நிறுத்திக் கொண்டிருப்பீர்கள். மனிதப் படைப்பு கஞ்சத்தனம் கொண்டதாக இருக்கின்றது” என்று பிரகடனம் செய்வீராக.