Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 17:98 — இஸ்ரவேலின் சந்ததியினர்

நமது வெளிப்பாடுகளை அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்ததால், அவர்களுக்குரிய நியாயமான தண்டனை இத்தகையதேயாகும். அவர்கள், “ எலும்புகளாகவும், துகள்களாகவும் நாம் மாறிய பின்னர், புதியதொரு படைப்பாக நாம் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுவோமா?” என்று கூறினார்கள்.

[17:97] எவரொருவரைக் கடவுள் வழிநடத்துகின்றாரோ, அவர்தான் உண்மையில் வழிநடத்தப்பட்டவர் ஆவார். மேலும் எவரையெல்லாம் அவர் வழிகேட்டில் அனுப்பிவிடுகின்றாரோ, அவர் களுக்கு அவரையன்றி எந்த இரட்சகர்களையும் மேலும் எஜமானர்களையும் நீர் ஒருபோதும் காணமாட்டீர். மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில் வலுக்கட்டாயமாக அவர்களை நாம் ஒன்று கூட்டுவோம்; குருடர்கள், ஊமைகள், மேலும் செவிடர்கள், அவர்கள் சேருமிடம் நரகமேயாகும். அதன் சூடு தணியும் போதெல்லாம், அவர்களுடைய நெருப்பை நாம் அதிகரிப்போம்.

[17:99] வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த அந்தக் கடவுள் அதே போன்ற படைப்புகளைப் படைக்கும் திறனுடையவர் என்பதை அவர்களால் காண முடியவில்லையா? மாற்றமுடியாததொரு வாழ்க்கைத் தவணையை அவர்களுக்காக அவர் முன்னரே தீர்மானித்திருக்கின்றார்? இருப் பினும், நம்ப மறுப்பவர்கள் நம்ப மறுத்தலையே வலியுறுத்துகின்றனர்.