Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 17:97 — இஸ்ரவேலின் சந்ததியினர்

எவரொருவரைக் கடவுள் வழிநடத்துகின்றாரோ, அவர்தான் உண்மையில் வழிநடத்தப்பட்டவர் ஆவார். மேலும் எவரையெல்லாம் அவர் வழிகேட்டில் அனுப்பிவிடுகின்றாரோ, அவர் களுக்கு அவரையன்றி எந்த இரட்சகர்களையும் மேலும் எஜமானர்களையும் நீர் ஒருபோதும் காணமாட்டீர். மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில் வலுக்கட்டாயமாக அவர்களை நாம் ஒன்று கூட்டுவோம்; குருடர்கள், ஊமைகள், மேலும் செவிடர்கள், அவர்கள் சேருமிடம் நரகமேயாகும். அதன் சூடு தணியும் போதெல்லாம், அவர்களுடைய நெருப்பை நாம் அதிகரிப்போம்.

[17:96] “எனக்கும், உங்களுக்கும் இடையில் ஒரு சாட்சியாக கடவுள் போதுமானவர். அவரை வழிபடுபவர்களை அவர் முற்றிலும் நன்கறிந்தவர், பார்ப்பவர்” என்று கூறுவீராக.

[17:98] நமது வெளிப்பாடுகளை அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்ததால், அவர்களுக்குரிய நியாயமான தண்டனை இத்தகையதேயாகும். அவர்கள், “ எலும்புகளாகவும், துகள்களாகவும் நாம் மாறிய பின்னர், புதியதொரு படைப்பாக நாம் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுவோமா?” என்று கூறினார்கள்.