குர்ஆன் 17:96 — இஸ்ரவேலின் சந்ததியினர்
“எனக்கும், உங்களுக்கும் இடையில் ஒரு சாட்சியாக கடவுள் போதுமானவர். அவரை வழிபடுபவர்களை அவர் முற்றிலும் நன்கறிந்தவர், பார்ப்பவர்” என்று கூறுவீராக.
[17:95] “வானவர்கள் வசிக்கக் கூடியதாக பூமி இருந் திருந்தால், வானவரான ஒரு தூதரை விண்ணி லிருந்து நாம் அவர்களுக்கு இறக்கி அனுப்பி யிருப்போம்” என்று கூறுவீராக.
[17:97] எவரொருவரைக் கடவுள் வழிநடத்துகின்றாரோ, அவர்தான் உண்மையில் வழிநடத்தப்பட்டவர் ஆவார். மேலும் எவரையெல்லாம் அவர் வழிகேட்டில் அனுப்பிவிடுகின்றாரோ, அவர் களுக்கு அவரையன்றி எந்த இரட்சகர்களையும் மேலும் எஜமானர்களையும் நீர் ஒருபோதும் காணமாட்டீர். மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில் வலுக்கட்டாயமாக அவர்களை நாம் ஒன்று கூட்டுவோம்; குருடர்கள், ஊமைகள், மேலும் செவிடர்கள், அவர்கள் சேருமிடம் நரகமேயாகும். அதன் சூடு தணியும் போதெல்லாம், அவர்களுடைய நெருப்பை நாம் அதிகரிப்போம்.