Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 18:21 — குகை

கடவுள்-ன் வாக்குறுதி உண்மை தான் என்று ஒவ்வொருவரும் அறிந்து கொள்வதற்காகவும், மேலும் உலக முடிவைக்* குறித்த அனைத்துச் சந்தேகங்களையும் நீக்குவதற்காகவும், அவர் களை கண்டுபிடிக்கப்படும்படி நாம் செய்தோம். பின்னர் அவர்களைப் பற்றி மக்கள் தங்களுக் கிடையில் தர்க்கம் செய்து கொண்டனர். சிலர், “அவர்களைச் சுற்றி ஒரு கட்டிடத்தை நாம் கட்டி விடுவோம்” என்று கூறினார்கள். அவர் களுடைய இரட்சகர்தான் அவர்களைப் பற்றி நன்கறிந்தவர். மிகைத்தவர்கள், “அவர்களைச் சுற்றி ஒரு வழிபாட்டுத்தலத்தை நாம் கட்டுவோம்” என்று கூறினார்கள்.

[18:20] “அவர்கள் உங்களைக் கண்டுபிடித்து விட்டால், அவர்கள் உங்களைக் கல்லா லடித்துக் கொன்று விடுவார்கள், அல்லது வற்புறுத்தி அவர்களுடைய மார்க்கத்திற்கு உங்களைத் திருப்பி விடுவார்கள், பின்னர் நீங்கள் ஒருபோதும் வெற்றியடைய முடியாது.”

[18:22] சிலர், “அவர்கள் மூவராக இருந்தனர்; அவர் களுடைய நாய் நான்காவதாக இருந்தது,” என்று கூறுவர். அதே சமயம் யூகம் செய்தவர் களாகவே மற்றவர்கள், “ஐந்து; அவர்களுடைய நாய் ஆறாவதாக இருந்தது” என்று கூறுவர். மற்றவர்கள், “ஏழு”, மேலும் எட்டாவதாக இருந் தது அவர்களுடைய நாய் என்று கூறினார்கள். “என் இரட்சகர்தான் அவர்களுடைய எண்ணிக்கையை நன்கறிந்தவர்” என்று கூறுவீராக. மிகச் சிலர் மட்டுமே சரியான அந்த எண்ணிக்கையை அறிந்திருக்கின்றனர். ஆகையால், அவர்களுடன் வாதித்துக் கொண்டிருக்காதீர்; அவர்களுடைய போக்கிலேயே சென்று விடும். எவர் ஒருவருடனும் நீர் இது குறித்து ஆலோசிக்க வேண்டாம்.