குர்ஆன் 18:20 — குகை
“அவர்கள் உங்களைக் கண்டுபிடித்து விட்டால், அவர்கள் உங்களைக் கல்லா லடித்துக் கொன்று விடுவார்கள், அல்லது வற்புறுத்தி அவர்களுடைய மார்க்கத்திற்கு உங்களைத் திருப்பி விடுவார்கள், பின்னர் நீங்கள் ஒருபோதும் வெற்றியடைய முடியாது.”
[18:19] அவர்களை நாம் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பிய போது, அவர்கள் ஒருவரை ஒருவர், “எத்தனை காலம் நீங்கள் இங்கே இருந்தீர்கள்?” என்று கேட்டுக் கொண்டனர். அவர்கள் “ஒரு நாளோ அல்லது நாளின் பகுதியோ நாம் இங்கிருந் தோம்,” என்று பதிலளித்தனர். “நாம் எவ்வளவு காலம் இங்கே இருந்தோம் என்பதை உம்முடைய இரட்சகர் மிக நன்றாக அறிவார், எனவே இந்தப் பணத்துடன் நம்மில் ஒருவரை நாம் நகரத்திற்கு அனுப்புவோம். அவர் தூய்மைமிக்க உணவை போய் கொண்டு வரட்டும், மேலும் நமக்காகவும் சிலவற்றை வாங்கி வரட்டும். அவர் தன் முகத்தை அதிகமாகக் காட்டிக் கொள்ளாமலும், மேலும் எவர் கவனத்தையும் ஈர்க்காமலுமிருக்கட்டும்.
[18:21] கடவுள்-ன் வாக்குறுதி உண்மை தான் என்று ஒவ்வொருவரும் அறிந்து கொள்வதற்காகவும், மேலும் உலக முடிவைக்* குறித்த அனைத்துச் சந்தேகங்களையும் நீக்குவதற்காகவும், அவர் களை கண்டுபிடிக்கப்படும்படி நாம் செய்தோம். பின்னர் அவர்களைப் பற்றி மக்கள் தங்களுக் கிடையில் தர்க்கம் செய்து கொண்டனர். சிலர், “அவர்களைச் சுற்றி ஒரு கட்டிடத்தை நாம் கட்டி விடுவோம்” என்று கூறினார்கள். அவர் களுடைய இரட்சகர்தான் அவர்களைப் பற்றி நன்கறிந்தவர். மிகைத்தவர்கள், “அவர்களைச் சுற்றி ஒரு வழிபாட்டுத்தலத்தை நாம் கட்டுவோம்” என்று கூறினார்கள்.