Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 18:19 — குகை

அவர்களை நாம் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பிய போது, அவர்கள் ஒருவரை ஒருவர், “எத்தனை காலம் நீங்கள் இங்கே இருந்தீர்கள்?” என்று கேட்டுக் கொண்டனர். அவர்கள் “ஒரு நாளோ அல்லது நாளின் பகுதியோ நாம் இங்கிருந் தோம்,” என்று பதிலளித்தனர். “நாம் எவ்வளவு காலம் இங்கே இருந்தோம் என்பதை உம்முடைய இரட்சகர் மிக நன்றாக அறிவார், எனவே இந்தப் பணத்துடன் நம்மில் ஒருவரை நாம் நகரத்திற்கு அனுப்புவோம். அவர் தூய்மைமிக்க உணவை போய் கொண்டு வரட்டும், மேலும் நமக்காகவும் சிலவற்றை வாங்கி வரட்டும். அவர் தன் முகத்தை அதிகமாகக் காட்டிக் கொள்ளாமலும், மேலும் எவர் கவனத்தையும் ஈர்க்காமலுமிருக்கட்டும்.

[18:18] அவர்கள் உண்மையில் உறங்கிக் கொண்டிருந்த போதும், அவர்கள் விழித்துக் கொண்டிருப்பதாகவே நீர் எண்ணியிருப்பீர். அவர்கள் நடுவே அவர்களுடைய நாய் அதன் முன்னங்கால்களை விரித்திருந்த அதே சமயம், அவர்களை நாம் வலப்புறமும் மற்றும் இடப்புறமும் புரட்டினோம். அவர்களை நீர் பார்த்திருந்தால், திகிலினால் அறையப் பட்டவராக, அவர்களை விட்டு நீர் வெருண்டோடி இருப்பீர்.

[18:20] “அவர்கள் உங்களைக் கண்டுபிடித்து விட்டால், அவர்கள் உங்களைக் கல்லா லடித்துக் கொன்று விடுவார்கள், அல்லது வற்புறுத்தி அவர்களுடைய மார்க்கத்திற்கு உங்களைத் திருப்பி விடுவார்கள், பின்னர் நீங்கள் ஒருபோதும் வெற்றியடைய முடியாது.”