Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 18:29 — குகை

“இது உங்கள் இரட்சகரிடமிருந்து வந்த சத்தியம் ஆகும்,” என்று பிரகடனம் செய்வீராக. பின்னர் எவரொருவர் விரும்புகின்றாரோ அவர் நம்பிக்கை கொள்ளட்டும், மேலும் எவரொருவர் விரும்புகின்றாரோ அவர் நம்ப மறுக்கட்டும். வரம்பு மீறுபவர்களுக்கு அவர்களை முற்றிலும் சூழ்ந்து கொள்ளக்கூடிய ஒரு நெருப்பை நாம் தயார் செய்துள்ளோம். அவர்கள் உதவிக்காக அலறும் போது, முகங்களை வெந்து போகச் செய்யும் அடர்ந்த அமிலம் போன்ற ஒரு திரவமே அவர்களுக்குக் கொடுக்கப்படும். என்ன ஒரு துன்பகரமான பானம்! என்ன ஒரு துக்ககரமான விதி!

[18:28] அவரை மட்டும் தேடியவர்களாக, இரவும் பகலும் தங்கள் இரட்சகரை வழிபடுவோருடன் இருப்பதற்கு உம்மை நீர் நிர்பந்தித்துக் கொள்ள வேண்டும். இவ்வுலகின் வீண்பகட்டுக்களைத் தேடியவர்களாக, அவர்களிடமிருந்து உமது கண்களைத் திருப்பிக் கொள்ள வேண்டாம். அன்றியும் எவர்களுடைய இதயங்களை நம்முடைய தூதுச் செய்தியில் கவனமற்றதாக நாம் ஆக்கிவிட்டோமோ அவர்களுக்கும்; தன் சுய விருப்பங்களைப் பின்பற்றுபவர்களுக்கும், மேலும் தங்களுடைய முன்னுரிமைகள் குழம்பிப் போனவர்களுக்கும் நீர் கீழ்ப்படிய வேண்டாம்.

[18:30] நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துபவர்களைப் பொறுத்த வரை, நன்னெறியான காரியங்களைச் செய் வோருக்குப் பிரதிபலன் வழங்க நாம் ஒரு போதும் தவறுவதில்லை.