Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 18:30 — குகை

நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துபவர்களைப் பொறுத்த வரை, நன்னெறியான காரியங்களைச் செய் வோருக்குப் பிரதிபலன் வழங்க நாம் ஒரு போதும் தவறுவதில்லை.

[18:29] “இது உங்கள் இரட்சகரிடமிருந்து வந்த சத்தியம் ஆகும்,” என்று பிரகடனம் செய்வீராக. பின்னர் எவரொருவர் விரும்புகின்றாரோ அவர் நம்பிக்கை கொள்ளட்டும், மேலும் எவரொருவர் விரும்புகின்றாரோ அவர் நம்ப மறுக்கட்டும். வரம்பு மீறுபவர்களுக்கு அவர்களை முற்றிலும் சூழ்ந்து கொள்ளக்கூடிய ஒரு நெருப்பை நாம் தயார் செய்துள்ளோம். அவர்கள் உதவிக்காக அலறும் போது, முகங்களை வெந்து போகச் செய்யும் அடர்ந்த அமிலம் போன்ற ஒரு திரவமே அவர்களுக்குக் கொடுக்கப்படும். என்ன ஒரு துன்பகரமான பானம்! என்ன ஒரு துக்ககரமான விதி!

[18:31] அவர்கள் ஏதேன் தோட்டங்களுக்கு தகுதியாகி விட்டார்கள், அதில் ஆறுகள் ஓடும். அங்கே அவர்கள் தங்கத்தினாலான காப்புகள் கொண்டு அலங்கரிக்கப்படுவார்கள் மேலும் பச்சைப்பட்டிலும், மென்பட்டிலுமான ஆடைகளை அணிவார்கள், இன்னும் வசதியான இருக்கை களில் சாய்ந்திருப்பார்கள். என்ன ஓர் அற்புதமான வெகுமதி; என்ன ஓர் அற்புதமான தங்குமிடம்!