Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 18:31 — குகை

அவர்கள் ஏதேன் தோட்டங்களுக்கு தகுதியாகி விட்டார்கள், அதில் ஆறுகள் ஓடும். அங்கே அவர்கள் தங்கத்தினாலான காப்புகள் கொண்டு அலங்கரிக்கப்படுவார்கள் மேலும் பச்சைப்பட்டிலும், மென்பட்டிலுமான ஆடைகளை அணிவார்கள், இன்னும் வசதியான இருக்கை களில் சாய்ந்திருப்பார்கள். என்ன ஓர் அற்புதமான வெகுமதி; என்ன ஓர் அற்புதமான தங்குமிடம்!

[18:30] நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துபவர்களைப் பொறுத்த வரை, நன்னெறியான காரியங்களைச் செய் வோருக்குப் பிரதிபலன் வழங்க நாம் ஒரு போதும் தவறுவதில்லை.

[18:32] இரு மனிதர்களின் உதாரணத்தை அவர் களுக்கு எடுத்துரைப்பீராக: அவர்களில் ஒருவருக்கு பேரீத்த மரங்களால் சூழப்பட்ட இரு திராட்சைத் தோட்டங்களை நாம் கொடுத்தோம், மேலும் அவற்றிற்கிடையில் மற்ற பயிர்களை அமைத்தோம்.