குர்ஆன் 18:32 — குகை
இரு மனிதர்களின் உதாரணத்தை அவர் களுக்கு எடுத்துரைப்பீராக: அவர்களில் ஒருவருக்கு பேரீத்த மரங்களால் சூழப்பட்ட இரு திராட்சைத் தோட்டங்களை நாம் கொடுத்தோம், மேலும் அவற்றிற்கிடையில் மற்ற பயிர்களை அமைத்தோம்.
[18:31] அவர்கள் ஏதேன் தோட்டங்களுக்கு தகுதியாகி விட்டார்கள், அதில் ஆறுகள் ஓடும். அங்கே அவர்கள் தங்கத்தினாலான காப்புகள் கொண்டு அலங்கரிக்கப்படுவார்கள் மேலும் பச்சைப்பட்டிலும், மென்பட்டிலுமான ஆடைகளை அணிவார்கள், இன்னும் வசதியான இருக்கை களில் சாய்ந்திருப்பார்கள். என்ன ஓர் அற்புதமான வெகுமதி; என்ன ஓர் அற்புதமான தங்குமிடம்!
[18:33] இரு தோட்டங்களும் பருவத்தில் அவற்றின் விளைச்சல்களை உற்பத்தி செய்தன, மேலும் அபரிமிதமாக, ஏனெனில் அவற்றினூடே ஒரு நதியை நாம் ஓடச் செய்தோம்.