Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 18:48 — குகை

உமது இரட்சகர் முன் அவர்கள் ஒரு வரிசையில் கொண்டு வந்து நிறுத்தப்படுவார்கள். நாம் உங்களை முதன் முதலில் படைத்தவாறே, தனித்தவர்களாக நீங்கள் நம்மிடம் வந்துள்ளீர்கள். உண்மையில், ஒருபோதும் நிகழாது என்று நீங்கள் உறுதியாகக் கூறிக் கொண்டிருந்தது இதுதான்.

[18:47] மலைகளை நாம் துடைத்தெடுத்து விடும் அந்நாள் வரும், மேலும் பூமியை நீர் பொட்டல் வெளியாகக் காண்பீர். அவர்களில் ஒருவரைக் கூட விட்டு விடாமல், அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று கூட்டுவோம்.

[18:49] பதிவேடுகள் காட்டப்படும், மேலும் அதில் உள்ளதைப் பற்றி அஞ்சியவர்களாகக் குற்றவாளிகளை நீர் காண்பீர். அவர்கள், “எங்களுக்குக் கேடுதான். சிறியதோ அல்லது பெரியதோ, எது ஒன்றையும் விட்டு விடாது, இப்புத்தகம் கணக்கில் கொண்டிருப்பது எப்படி?” என்று கூறுவார்கள். அவர்கள் செய்த ஒவ்வொன்றும் முன்னால்கொண்டு வரப்படு வதை அவர்கள் காண்பார்கள். உமது இரட்சகர் எவர் ஒருவருக்கும் ஒருபோதும் அநீதமிழைப் பதில்லை.