குர்ஆன் 18:47 — குகை
மலைகளை நாம் துடைத்தெடுத்து விடும் அந்நாள் வரும், மேலும் பூமியை நீர் பொட்டல் வெளியாகக் காண்பீர். அவர்களில் ஒருவரைக் கூட விட்டு விடாமல், அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று கூட்டுவோம்.
[18:46] செல்வமும், பிள்ளைகளும் இந்த வாழ்வின் இன்பங்களாகும், ஆனால் நன்னெறியான காரியங்கள் உமது இரட்சகரிடமிருந்து ஒரு நிரந்தரமான பிரதிபலனையும் மேலும் மிகவும் மேலானதொரு எதிர்பார்ப்பையும் வழங்குகின்றன.
[18:48] உமது இரட்சகர் முன் அவர்கள் ஒரு வரிசையில் கொண்டு வந்து நிறுத்தப்படுவார்கள். நாம் உங்களை முதன் முதலில் படைத்தவாறே, தனித்தவர்களாக நீங்கள் நம்மிடம் வந்துள்ளீர்கள். உண்மையில், ஒருபோதும் நிகழாது என்று நீங்கள் உறுதியாகக் கூறிக் கொண்டிருந்தது இதுதான்.