குர்ஆன் 18:46 — குகை
செல்வமும், பிள்ளைகளும் இந்த வாழ்வின் இன்பங்களாகும், ஆனால் நன்னெறியான காரியங்கள் உமது இரட்சகரிடமிருந்து ஒரு நிரந்தரமான பிரதிபலனையும் மேலும் மிகவும் மேலானதொரு எதிர்பார்ப்பையும் வழங்குகின்றன.
[18:45] இந்த வாழ்க்கைக்கு, உதாரணமாக, பூமியின் தாவரங்களை முளைப்பிப்பதற்காக விண்ணி லிருந்து நாம் இறக்கியனுப்பும் தண்ணீரை எடுத்துரைப்பீராக, பின்னர் அவை காற்றில் அடித்துச் செல்லப்படும் கூளங்களாக மாறிவி டுகின்றன. கடவுள் அனைத்தையும் செய்யும் திறனுடையவராக இருக்கின்றார்.
[18:47] மலைகளை நாம் துடைத்தெடுத்து விடும் அந்நாள் வரும், மேலும் பூமியை நீர் பொட்டல் வெளியாகக் காண்பீர். அவர்களில் ஒருவரைக் கூட விட்டு விடாமல், அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று கூட்டுவோம்.