குர்ஆன் 18:45 — குகை
இந்த வாழ்க்கைக்கு, உதாரணமாக, பூமியின் தாவரங்களை முளைப்பிப்பதற்காக விண்ணி லிருந்து நாம் இறக்கியனுப்பும் தண்ணீரை எடுத்துரைப்பீராக, பின்னர் அவை காற்றில் அடித்துச் செல்லப்படும் கூளங்களாக மாறிவி டுகின்றன. கடவுள் அனைத்தையும் செய்யும் திறனுடையவராக இருக்கின்றார்.
[18:44] அது ஏனெனில் கடவுள் தான் உண்மையான ஒரே இரட்சகரும், எஜமானரும் ஆவார்; அவர் மிகச்சிறந்த பிரதிபலனை வழங்குகின்றார், மேலும் மிகச் சிறந்த விதி அவரிடமே உள்ளது.
[18:46] செல்வமும், பிள்ளைகளும் இந்த வாழ்வின் இன்பங்களாகும், ஆனால் நன்னெறியான காரியங்கள் உமது இரட்சகரிடமிருந்து ஒரு நிரந்தரமான பிரதிபலனையும் மேலும் மிகவும் மேலானதொரு எதிர்பார்ப்பையும் வழங்குகின்றன.