குர்ஆன் 18:50 — குகை
நாம் வானவர்களிடம், “ஆதாமின் முன் சிரம் பணியுங்கள்” என்று கூறினோம். அவர்கள் சிரம் பணிந்தனர், சாத்தானைத் தவிர. அவன் ஒரு ஜின்னாக ஆனான், ஏனெனில் அவன் தன்னுடைய இரட்சகரின் கட்டளைக்கு கீழ்ப்படிய மறுத்தான்.* அவர்கள் உங்கள் விரோதிகளாக இருந்த போதிலும், எனக்குப் பதிலாக அவனையும் அவனுடைய சந்ததி யினரையும் நீங்கள் எஜமானர்களாக எடுத்துக் கொள்வீர்களா? என்ன ஒரு துக்ககரமான மாற்று!
[18:49] பதிவேடுகள் காட்டப்படும், மேலும் அதில் உள்ளதைப் பற்றி அஞ்சியவர்களாகக் குற்றவாளிகளை நீர் காண்பீர். அவர்கள், “எங்களுக்குக் கேடுதான். சிறியதோ அல்லது பெரியதோ, எது ஒன்றையும் விட்டு விடாது, இப்புத்தகம் கணக்கில் கொண்டிருப்பது எப்படி?” என்று கூறுவார்கள். அவர்கள் செய்த ஒவ்வொன்றும் முன்னால்கொண்டு வரப்படு வதை அவர்கள் காண்பார்கள். உமது இரட்சகர் எவர் ஒருவருக்கும் ஒருபோதும் அநீதமிழைப் பதில்லை.
[18:51] வானங்கள் மற்றும் பூமியின் படைப்பிற்கோ, அன்றி அவர்களுடைய படைப்பிற்கோ கூட அவர்களைச் சாட்சிகளாக ஒருபோதும் நாம் அனுமதிக்கவில்லை. அன்றியும் தீயவர்களை எனது சாம்ராஜ்யத்தில்* பணிபுரிய நான் அனுமதிப்பதுமில்லை.