குர்ஆன் 18:51 — குகை
வானங்கள் மற்றும் பூமியின் படைப்பிற்கோ, அன்றி அவர்களுடைய படைப்பிற்கோ கூட அவர்களைச் சாட்சிகளாக ஒருபோதும் நாம் அனுமதிக்கவில்லை. அன்றியும் தீயவர்களை எனது சாம்ராஜ்யத்தில்* பணிபுரிய நான் அனுமதிப்பதுமில்லை.
[18:50] நாம் வானவர்களிடம், “ஆதாமின் முன் சிரம் பணியுங்கள்” என்று கூறினோம். அவர்கள் சிரம் பணிந்தனர், சாத்தானைத் தவிர. அவன் ஒரு ஜின்னாக ஆனான், ஏனெனில் அவன் தன்னுடைய இரட்சகரின் கட்டளைக்கு கீழ்ப்படிய மறுத்தான்.* அவர்கள் உங்கள் விரோதிகளாக இருந்த போதிலும், எனக்குப் பதிலாக அவனையும் அவனுடைய சந்ததி யினரையும் நீங்கள் எஜமானர்களாக எடுத்துக் கொள்வீர்களா? என்ன ஒரு துக்ககரமான மாற்று!
[18:52] “என்னுடன் தெய்வங்களென நீங்கள் உறுதி யாகக் கூறிக்கொண்டிருந்த என் பங்கு தாரர்களை அழையுங்கள்;” என்று அவர் கூறும் அந்த நாள் வரும், அவர்களை அவர்கள் அழைப் பார்கள், ஆனால் அவர்கள் அவர்களுக்கு மறுமொழி அளிக்க மாட்டார்கள். தாண்டிவிட முடியாததொரு தடை அவர்களை ஒருவரி லிருந்து மற்றவரைப் பிரித்து வைக்கும்.