குர்ஆன் 18:52 — குகை
“என்னுடன் தெய்வங்களென நீங்கள் உறுதி யாகக் கூறிக்கொண்டிருந்த என் பங்கு தாரர்களை அழையுங்கள்;” என்று அவர் கூறும் அந்த நாள் வரும், அவர்களை அவர்கள் அழைப் பார்கள், ஆனால் அவர்கள் அவர்களுக்கு மறுமொழி அளிக்க மாட்டார்கள். தாண்டிவிட முடியாததொரு தடை அவர்களை ஒருவரி லிருந்து மற்றவரைப் பிரித்து வைக்கும்.
[18:51] வானங்கள் மற்றும் பூமியின் படைப்பிற்கோ, அன்றி அவர்களுடைய படைப்பிற்கோ கூட அவர்களைச் சாட்சிகளாக ஒருபோதும் நாம் அனுமதிக்கவில்லை. அன்றியும் தீயவர்களை எனது சாம்ராஜ்யத்தில்* பணிபுரிய நான் அனுமதிப்பதுமில்லை.
[18:53] குற்றவாளிகள் நரகத்தைக் காண்பார்கள், மேலும் அவர்கள் அதனுள் விழுந்து விடுவார் கள் என்பதை உணர்ந்து கொள்வார்கள். அதிலிருந்து தப்பித்தல் என்பதே அவர்களுக்கு இருக்காது.